திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (20:37 IST)

ரோகித் தவான் அதிரடியில் இந்தியா 202 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 202 ரன்கள் குவித்தது.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் ஒருநாள் தொடர் முடிவடைந்து தற்போது டி20 போட்டி தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று முதாலவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் அதிரடியாக ஆடினர். இருவர் தலா 80 ரன்கள் குவித்தனர்.