திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:25 IST)

இனி எப்போதுமே சி எஸ் கேவுக்கு விளையாட மாட்டாரா ரெய்னா – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் பாதியிலேயே இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா இனி எப்போதுமே சி எஸ் கேவுக்காக விளையாட மாட்டார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார்.

இதற்குக் காரணமாக இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமில்லை என சொல்லப்படுகிறது. ரெய்னாவுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தோனிக்கு கொடுத்தது போன்ற  ஒரு அறையை ரெய்னா கேட்டதாகவும், நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ரெய்னாவின் மீதான தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் இனி எப்போதுமே ரெய்னா சி எஸ் கே அணிக்காக விளையாட மாட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.