செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:36 IST)

நாட்டில் கொரோனா இறப்பு இல்லாத பகுதிகள்! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பால் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மொத்த பாதிப்புகள் 1.50 கோடியை நெருங்கியுள்ளன. இந்நிலையில் மாநிலம்தோறும் இறப்பு எண்ணிக்கை வீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு பதிவாகாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி திரிபுரா, சிக்கிம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா இறப்பு பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.