நடந்த கொடூர கொடுமைக்கு நீதி வேண்டும்: சுரேஷ் ரெய்னா ட்விட்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (13:14 IST)
பஞ்சாப் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கோரியுள்ளார். 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், தனிப்பட்ட காரணங்களுக்கு சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும் என தெரிவித்தது.
 
இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவில் மாமாவை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாகவும் அவரது அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அவரது மாம - அத்தை மகன்களும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார். 
 
தற்போது சுரேஷ் ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில், என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். என் மாமா இறந்துவிட்டார். மாமா மகன் ஒருவர் நேற்று உயிரிழந்தார். என்னுடைய அத்தை வெண்ட்டிலேட்டர் உதவியுடன் அபத்தான் நிலையில் உள்ளார். 
 
இப்போது வரை அன்று இரவு என்ன நடந்தது என தெடியவில்லை. பஞ்சாப் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடூரர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :