டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் – சமாளிக்குமா பாகிஸ்தான் ?

Last Modified வெள்ளி, 31 மே 2019 (15:17 IST)
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளது.

உலககோப்பை போட்டிகள் இந்த முறை கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் நடைபெறுகின்றன. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டித் தொடங்கியுள்ளது.

டிரண்ட் பிரிட்ஜ் , நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளார்.  வலிமைமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சி ஆட்டங்களில் அதிரடியாக விளையாடி கலக்கியுள்ளது. பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வென்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி :-
கெய்ல், ஷாய் ஹோப்,டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மைர், நிக்கோலஸ் பூரன், அந்த்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர் (கே), கார்லஸ் பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஓஷனே தாமஸ்

பாகிஸ்தான் அணி :-
இனாம் உல் ஹக், பக்தர் ஸமன், பாபர் அஸாம், ஹரிஸ் சோஹைல், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது (கே), இமாட் வஸிம், ஷதாப் கான், ஹசன் அலி, முகமது அமீர், வஹாப் ரியாஸ்இதில் மேலும் படிக்கவும் :