1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (10:48 IST)

பொல்லார்ட் மற்றும் பிராவோ பங்களிப்பால் வென்ற வெஸ்ட் இண்டீஸ்!

தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி 20 போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி 20 போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி51 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் ப்ராவோ 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.