மேற்கிந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சால் திணறும் வங்க தேசம்
வங்க தேசம் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் சேற்கொண்டுள்ளது. அதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேஸ்கிந்திய தீவுகள் அணியின் சூறாவளி பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாத வங்க தேசம் அணியினர் 43 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தனர். கீமர் ரோச் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து, களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிராத்வைட் சிறப்பாக ஆடி சதமடித்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த வங்க தேசம் மீண்டும் மளமளவென விக்கெட்டுகளை கைப்பற்றியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேச அணி 18 ஓவரில் 6 விக்கெட் இழ்ப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.