வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:48 IST)

ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட மாட்டோம்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அறிவிப்பு!

Australia
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் மாதம் நடைபெற திட்டமிட்டு இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட மாட்டோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
 மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற திட்டமிட்டு இருந்த இந்த தொடரில் தாங்கள் விளையாடு போவதில்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி தெரிவித்துள்ளது 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் பெண் கல்வி பெண் வாழைவாய்ப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி தெரிவித்துள்ளது
 
இந்த விஷயத்தில் ஆதரவளித்த ஆஸ்திஏலிய அரசுக்கு நன்றி என்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran