வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (17:39 IST)

ராகுல் மற்றும் நடராஜனின் தவறால் நடந்த குழப்பம் – வேட் விக்கெட்டை கோட்டைவிட்ட இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பௌலிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதனையடுத்து இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வேட் 80 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவர் 11 ஆவது ஓவரில் நடராஜன் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கினார். ஆனால் நடராஜனோ விக்கெட் கீப்பர் ராகுலோ அப்பீல் செய்யவே இல்லை. எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற கோலி ஸ்க்ரீனில் பந்தின் ர்ப்ளேயை பார்த்துவிட்டு அப்பீல் செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் டி ஆர் டைம் முடிந்துவிட்டதால் நடுவர் மறுத்துவிட்டார்.