வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (17:22 IST)

3வது டி20: இந்திய அணி போராடி தோல்வி!

3வது டி20: இந்திய அணி போராடி தோல்வி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பௌலிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதனையடுத்து இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் மூன்றாவது போட்டியை இந்திய அணி வெல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது