திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (14:02 IST)

இந்திய அணிக்கு விராட் கோலி அறிவுரை...

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக நடைபெற்ற தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இந்திய அணி மூன்று 20 ஓவர்,4  டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது.
எனவே இந்திய அணி மும்பையில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செல்ல இருக்கிறார்கள்.
 
இது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
 
’இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு என்னென்னெ தவறுகள் செய்தோம் என்பதை தெரிந்து கொண்டோம். இப்போது நம் இந்திய அணிவீரர்கள் தம் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.’