கோடிகளில் புரளும் கேப்டன் விராட் கோலி....

koli
Last Modified புதன், 28 நவம்பர் 2018 (13:24 IST)
இந்திய அணியை வழிநடத்தி உலக அரங்கில் பல போட்டிகளில்  வெற்றி பெற உதவிய கோலியின் தலைமை குணம் இன்றியமையாதது. கிரிக்கெட்  அவரது தொழிலாக  இருக்க ... இதையும் தாண்டி இந்திய வீரர்களில் விளம்பரம் மூலம் அதிக வருமானம் பெறுபவராக கேப்டன்  கோலி உள்ளார். 
ஆம்.நடப்பு ஆண்டில் மட்டும் விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம் பெற்றவராக கோலி அறியப்படுகிறார். இந்த ஆண்டில் அவர் விளம்பரத்துக்காக பெற்ற தொகை ரூ. 170 கோடி ஆகும்.
 
உலகின் செல்வந்த விளையாட்டான கிரிக்கெட் பலருக்கு முகவரி கொடுப்பதோடல்லாமல் விளம்பரத்தின் மூலம் கோடி ரூபாய் கிடைக்கும்  பணமழைக் காட்டில் நனையவும் வைக்கிறது என்றே பலரையும் பேச வைத்துள்ளது  விராட் கோலியின் இந்த விளம்பர வருமான விபரங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :