புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (13:57 IST)

இந்தியாவின் ஒட்டுமொத்த சாதனைகளையும் முறியடித்த தூக்குதுரை - தல டக்கர் டோய்!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தனர். அதன் பிறகு தல ரசிகர்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் மோஷன் போஸ்டரை நேற்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் வெளியிட்டுள்ளனர். 
 
விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த படம். அவர்கள் காத்திருப்பிறகு பலனாக விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றது.
மேலும் யூடியூப் டிரண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள ‘விஸ்வாசம்‘ மோஷன் போஸ்டர், ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் சாதனையை ஒருமணி நேரத்தில் தகர்த்துள்ளது. 
 
ரஜினியின் ‘பேட்ட’ பட மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 1,43,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ள நிலையில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட மோஷன் போஸ்டருக்கு ஒரே மணி நேரத்தில் 1,57,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த போஸ்டர் தற்போது வரை 2,39,000 லைக்ஸ்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கள் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை பெற்றுள்ளது. 
மேலும் ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டர் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 இடத்திலும், கட்டார் நாட்டில் 8வது இடத்திலும், இலங்கையில் 23வது இடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர் வெளிவந்த 12 மணி நேரத்தில் 2 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 
 
இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டர் வரிசையில் விஸ்வாசம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட (144K), தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் (124K), சாமி ஸ்கொயர் (101K), சயீரா நரசிம்மமரெட்டி (82K) உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு இந்த மோஷன் போஸ்டர் இதுவரை 277k லைக்ஸ் பெற்றுள்ளது, இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகம் பேர் லைக்ஸ் செய்த மோஷன் போஸ்டராக தல படத்தின் விஸ்வாசம் ரிலீசுக்கு முன்னரே மெகா சாதனை படைத்துள்ளது.