வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (15:44 IST)

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? வினேஷ் போகத் வழக்கறிஞர் தகவல்..!

Vinesh Phogat
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வழங்க முடியாது என வினேஷ் போகத் மனுவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறப்பட்டு போட்டி விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீடு மனு நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச நடுவர் மன்றம் ஒரு வரி தீர்ப்பு மட்டுமே அளித்துள்ளது என்றும் முழுமையான தீர்ப்பு கிடைக்க 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்றும் அந்த தீர்ப்பில் மனு தள்ளுபடிக்கான காரணம் என்ன என்று எங்களுக்கு புரியவில்லை, இந்த தீர்ப்பு குறித்து எங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று வினேஷ் போகத் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் முழுமையான தீர்ப்பு கிடைத்ததும் அடுத்த 30 நாட்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒன்றிணைந்த நடுவர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

Edited by Mahendran