தொடர்புடைய செய்திகள்
- ஹரியானா தேர்தலில் போட்டியா.? ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு.!
- ஹரியானா தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியா? பாஜகவுக்கு சிக்கல்?
- கேரள காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் வன்கொடுமை:' கருத்து சொன்ன பெண் தலைவர் டிஸ்மிஸ்..!
- இன்றைய நாள் மறைந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிக்கும் நாள்: மம்தா பானர்ஜி அறிவிப்பு..!
- பெண் மருத்துவர் கொலையாளிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்..!
தன்னுடைய ரயில்வே பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் மல்யுத்த வாழக்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியா திரும்பிய அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் அவர் தற்போது காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் மற்றொரு குத்துச்சண்டை வீரான பஜ்ரங் புனியாவோடு இணைந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததில் இருந்து இந்த கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில் வினேஷ் போகத் தான் வகித்து வந்த ரயில்வே பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் அவர் காங்கிரஸில் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
