1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (18:26 IST)

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: பெண் உயிரிழப்பு

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்த போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு சீல் வைக்க உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து அதன் பின் கருக்கலைப்புக்கு சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு கருக்கலைப்பு செய்த போது எதிர்பாராத விதமாக அந்த கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டார். இதனை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பு ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் பேசி வருவதாக கூறப்படுகிறது.

கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்தவுடன் கருக்கலைப்பு செய்ய முயற்சித்ததாகவும் சட்டவிரோதமாக நடந்த இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது

இதனை அடுத்து பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க மரணமடைந்த கர்ப்பிணியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran