1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (17:54 IST)

பரணி வித்யாலயா பள்ளியில் வாலிபால் போட்டி

கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் புரமோசன் பௌண்டேசன் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி – இரு தினங்களாக நடைபெற்ற போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்றன



கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் School Sports Promotion Foundation சார்பில் மாவட்ட அளவிலான 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இரு தினங்களாக நடைபெற்றன. இந்த போட்டியில், கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் 8 பள்ளிகளில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் வீரர்கள் தேர்வு செய்து, மாநில அளவிலான வாலிபால் போட்டிக்கு கரூர் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கரூர் ஸ்டார் சி.பி.எஸ்.இ பள்ளி முதலிடத்தினையும், இரண்டாவது இடத்தினை கரூர் வெற்றி விநாயகா பள்ளியும் பிடித்தது. இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் பள்ளிக்குழுமங்களின் தாளாளர் மோகனரங்கன், பள்ளிகளின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், பள்ளியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக SSPF (school sports promotion foundation) தமிழ்நாடு வாலிபால் சங்க செயலாளர் முனைவர் கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சி.ஆனந்தகுமார்