1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (18:54 IST)

பழங்கால அம்மன் சிலை மீட்பு - கரூரில் பரபரப்பு (வீடியோ)

கரூர் அருகே உள்ள ஆத்தூர் காட்டுப்பகுதியில் சுமார் 3 அடி உயரமுள்ள உலோகத்திலான பழங்கால அம்மன் சிலை, கிடந்துள்ளது. 
 
இந்நிலையில் இன்று காலை, முருகன் என்பவர், (மின்சார வாரியத்தில் லைன்மேன் ஹெல்பர்) மற்றும் விவசாயிகள் அப்பகுதியின் வழியாக செல்லும் போது, காட்டுப்பகுதியில் சுமார் 200 வருட கால பழங்கால சிலை ஒன்று கிடந்துள்ளது. முற்றிலும் உலோகத்திலான சிலையானது சுமார் 3 அடி உயரம் வாய்ந்த அம்மன் சிலை ஆகும்.
 
மேலும், கரூர் மாவட்டத்தினுடைய சிலை இது கிடையவே, கிடையாது என்று சிலை வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து கூறியுள்ள நிலையில், இந்த சிலையை அப்பகுதியின் வழியாக யாரோ தான், கடத்த முயற்சித்த போது, போலீஸார் சோதனையை அடுத்து அப்பகுதியில் வீசி சென்றுள்ளதாக சந்தேகிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், ஒரு சிலை தான் அப்பகுதியில் கிடந்ததா? மேலும், அதே பகுதியில் வேறு ஏதும் சிலைகள் கிடக்கின்றதா? என்று கரூர் நகர போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 
மேலும், ஆங்காங்கே தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் பிரிவு போலீஸாரின் தீவிர சோதனையில் தான் இந்த சிலை மற்ற மாநிலத்திற்கு கடத்த இருந்ததா ? என்று சந்தேக கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையை கரூர் தாசில்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறையினரின் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சிலை, தமிழக அளவில் மையப்பகுதியான கரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளன.
 
-சி. ஆனந்தகுமார்