திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (19:34 IST)

வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் அபராதம்

கரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில், வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் பொது சுகாதார விதியின் கீழ் அவர்களுக்கு அபராதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.



கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெங்கு கொசுபுளு உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஆட்சியர் த.அன்பழகன் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு நடைபெற்று வரும் துாய்மை பணி குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் இரண்டாவது முறையாக குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும், வீடுகளில் பிளாஸ்டிக் பேரல்களில் பிடித்து வைத்துள்ள தண்ணீரை சுகாதாரமாக மூடிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால் பல்வேறு வீடுகளில் அதை பின்பற்றாமல் தொடர்ந்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தனர். மேலும் வீடுகளை சுற்றி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்தனர்.
இதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வீட்டின் உரிமையாளர்களை அழைத்து அதை சுட்டிகாட்டியும் அவர்களுக்கு பொது சுகாதார விதியின் கீழ் 500 ருபாய் அபராம் விதித்தார்.

அதே போல் திருமாநிலயைூர் பகுதியில் செயல்படாமல் பூட்டியிருந்த சாயப்பட்டறைக்கு 2000 ஆயிரம் ருபாய் அபராதம் விதித்தார்.மேலும் வெங்கமேடு பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளை அழைத்து வார்வா கொசுபுழு உற்பத்தி ஆவது குறித்து காட்டினார்.

இது குறித்து செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும் போது, பொது மக்கள் தங்களுடைய குடியிருப்புகளை சுற்றி சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர்கள் பின்பற்றாமல் தொடர்ந்து அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு குறைந்த பட்சம் 500 ருபாயும், தொழில் நிறுனங்களுக்கு 10 ஆயிரம் ருபாயும் பொது சுகாதாரவிதியின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

சி.ஆனந்தகுமார்