புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:45 IST)

பிரச்சனைகள் தீர இரண்டு பூஜைகள் செய்ய வேண்டும் – சாமியாரின் பாலியல் லீலைகள் !

பெங்களூரில் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக இந்து சாமியார் ஒருவரிடம் சென்ற பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த அந்த பெண் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் சந்தித்த பல பிரச்சனைகளுக்காக சாமியார் ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் பிரச்சனைகள் தீர இரண்டு பூஜைகள் செய்ய வேண்டும் என சொல்ல அதற்கு அந்த பெண் சம்மதித்துள்ளார். ஒரு பூஜையைத் தனது வீட்டில் முடித்த அந்த சாமியார் அடுத்த பூஜையை குக்கே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் செய்ய வேண்டுமென சொல்லி அவரை அங்கு வரவழைத்துள்ளார்.

அந்த பெண் கோவிலுக்கு வரவே அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். அந்த பெண் எதிர்ப்புத் தெரிவிக்கவே இதற்கு சம்மதித்தால்தான் பூஜை நடைபெறும் எனக் கூற அந்த பெண் அங்கிருந்து தப்பித்து போலிஸாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அந்த சாமியாரைக் கைதுசெய்துள்ளனர்.