1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Umesh yadhav compared test championship with world cup

அந்த போட்டி உலகக்கோப்பை வெற்றிக்கு சமம்… உமேஷ் யாதவ் பூரிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரில் இடம்பெற்றுள்ள உமேஷ் யாதவ் ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியை வெல்வது உலகக்கோப்பை இறுதி போட்டியை வெல்வதற்கு சமம். அதுவும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு இது மிகவும் முக்கியமான தருணம்’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஜடேஜா வேகப்பந்துவீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு இடம் கிடைக்கும்… சஹால் கருத்து!