1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 22 மே 2021 (14:36 IST)

முழு ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுங்கள் - அரசிடம் மருத்துவர்கள் திட்டவட்டம்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்குநாள் அதிகரித்து நாடு முழுக்க பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளே இல்லாத ஊரடங்கை தமிழ அரசு அறிவித்துள்ளது. 
 
அடுத்து வர கூடிய ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்படும் என்றும் பொது மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வர அனுமதி இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்க உள்ளனர் என்று தகவல் கூறுகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ள மருத்துவர்கள் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காக இன்னும் நாம் பல உயிர்களை பறிகொடுக்க முடியாது. எனவே முழு ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுங்கள் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.