செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (15:35 IST)

ஸ்பான்சர் முக்கியம்.. பாட்டில்களை எடுக்காதீங்க! – கால்பந்து சங்கம் அறிவுரை!

ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டிலை அப்புறப்படுத்தியது வைரலான நிலையில் ஐரோப்பிய கால்பந்து சங்கம் வீரர்களுக்கு அறிவுரை வெளியிட்டுள்ளது.

ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கோகோ கோலா நிறுவன பங்கும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் கால்பந்து வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள ஐரோப்பிய கால்பந்து சங்கம் “இதுபோன்ற பெரிய போட்டிகளை நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் மிக அவசியம். எனவே வீரர்கள் செய்தியாளர் சந்திப்பில் வைக்கும் ஸ்பான்சர் பாட்டில்களை அகற்ற வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளது