புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (17:01 IST)

டெல்லியில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடக்காது: பிசிசிஐ அதிரடி!!

டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிக அளவில் உள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புகையால்  வீரர்கள் வாந்தி எடுப்பதும், மாஸ்க் மாட்டி சுற்றுவதும் இணையத்தில் வைரலானது. 
 
இனி குளிர்காலத்தில் டெல்லியில் விளையாட்டு போட்டிகள் நடத்த கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.
 
ஆனால், பிசிசிஐ தரப்பு நிர்வாகிகளோ காற்று மாசு காரணமாக டெல்லியில் போட்டிகள் நடத்தப்படுவதில்லை என கூறப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. 
 
அந்த வகையில் இனி 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் டெல்லியில் நடந்தப்படாது என்றும், டெல்லி அணி விளையாடும் போட்டிகள் அனைத்து போட்டிகளும் உத்தர பிரதேசத்திற்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.