டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு ...வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம் !

india
sinoj kiyan| Last Updated: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (14:39 IST)
மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடத்த முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக விளையாடி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
இரண்டாவது போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.எனவே இரு அணிகளும் தலா 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி  ஒடிசா மாநிலம்  கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏவன் லிவீஸ் 35 பந்துகளுக்கு 18 ரன்களும், சாய் ஹோப் 31 பந்துகளுக்கு 26 ரன்களும் அடித்து களத்தில் நிதானமாக விளையாடி வருகின்றனர். அணியின் ஸ்கோர் 11 ஓஒவர்களுக்கு 45 ஆக உள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :