திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (19:25 IST)

’தலைவி’ புரமோஷனுக்காக சென்னை வருகிறார் கங்கனா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் முடிவடைந்து கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது
 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த படத்தின் பாடல்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த புரமோஷன் விழாவுக்காக கங்கனா ரனாவத் சென்னை வரவிருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அரவிந்த்சாமி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள.து தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனாவும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது