இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம்: மதில் மேல் பூனையாய் இலங்கை

malinga
Last Modified திங்கள், 1 ஜூலை 2019 (14:15 IST)
யாராலும் அதிகம் எதிர்பார்க்கப்படாத ஆனால் உலக கோப்பையில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆட்டமாக இன்றைய இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் இருக்கும் என தெரிகிறது.

இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை அணி 2 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. மீத இரண்டு ஆட்டங்கள் மழையால் நிறுத்தப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தற்போது இலங்கை பெற்றிருக்கும் புள்ளிகள் 6. மீத இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் 10 புள்ளிகளோடு அரையிறுதிக்கு அருகில் வந்துவிடும். பட்டியலில் மேலே உள்ள அணிகள் தங்களுக்கு மீதம் உள்ள ஆட்டங்களில் சொதப்பி ஆட்டம் இழந்தால் இங்கிலாந்தின் புள்ளி கணக்கோடு சமமாக இருக்கும். ரன் ரேட்டை பொறுத்து இலங்கைக்கு வாய்ப்ப்பு கிடைக்கலாம். மேலும் இலங்கைக்கு அடுத்த ஆட்டம் இந்தியாவோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸுக்கு வாய்ப்பில்லை என்றாலும் ஊருக்குள் அடிவாங்காமல் இருக்க இலங்கையை அடித்துதான் ஆக வேண்டும். ஒரு காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியனாக வலம் வந்த அணி. இப்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. முடிந்தளவு சில வெற்றிகளையாவது கைகொள்ளவே வெஸ்ட் இண்டீஸ் முயற்சிக்கும். எனவே இந்த நாள் ஆட்டமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கான ஒன்றே!இதில் மேலும் படிக்கவும் :