செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 2 மே 2022 (10:31 IST)

ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் மோதுவது யார் யார்?

rr vs kkr
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் மோதுவது யார் யார்?
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 46 போட்டிகள் நடந்துள்ளன நிலையில் இன்று நாற்பத்து ஏழாவது போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி இன்று வெற்றிபெற்றால் ஏழாவது அல்லது ஆறாவது இடத்திற்கு முன்னேறும்
 
அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்த அணி இன்று வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்