தொடர்புடைய செய்திகள்
- கே எல் ராகுல் சதம்… பண்ட் & ஹர்திக் அதிரடி – இந்திய அணி 336 ரன்கள் சேர்ப்பு!
- பொளந்து கட்டும் பண்ட்… கே எல் ராகுல் சதம் – வலுவான நிலையில் இந்தியா!
- டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு… இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா!
- பிரசித் கிருஷ்ணா ஒரு அதிசய வீரர்: சோயப் அக்தர் புகழாராம்!
- 100 நாட்களுக்கு கொரோனா 2வது அலையின் தாக்கம் !
இந்தியாவின் இன்றைய ஸ்கோர் 112/2, 224/4, 336/6. அடுத்தது 448/8 எப்போது?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது என்பதை சற்று முன் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்தியாவின் இன்றைய ஸ்கோரில் ஒரு புதுமை ஏற்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி இன்றைய இன்னிங்சில் 112 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள், 224 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் மற்றும் 336 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என எடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 112 ரன்கள் விகிதமாகவும் விக்கெட்டுகள் இரண்டு இரண்டாகவும் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது
இதனையடுத்து இந்திய அணி எதிர்காலத்தில் 448 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் எப்போது எடுக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணி சர்வதேச போட்டிகளில் இவ்வாறு சராசரியாக ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
