வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (13:52 IST)

ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அரையிறுதி: மழை வர வாய்ப்பு என தகவல்..!

இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரை இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றி உள்ளதை அடுத்து  மேற்குவங்க மாநிலத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று மழையால் ஆட்டம் தடைபட்டால் நாளை ரிசர்வ் டேயில் போட்டி ஒத்திவைக்கப்படும் என்றும் நாளையும்  மழையால் போட்டி தடைபட்டால்  லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி அல்லது புள்ளிகள் அடிப்படையில்  அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெற்றதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva