1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (18:21 IST)

உலக கோப்பை அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு Reserve Day உண்டு!

Icc World cup 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில், இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இந்த லீக் சுற்றுகள் முடிவில் பல  நேபாளம், இங்கிலாந்து, வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின. விதிமீறலில் ஈடுபட்டதாக இலங்கை அணியை ஐசிசி  சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

நாளை முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் ஐசிசி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் நடக்காமல் போனால் அடுத்த நாளுக்கு ரிசர்வ் டே ( Reserve Day)க்கு ஒத்திவைக்கப்படும் என தெரிவித்துள்ளது.