திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:35 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை அணியுடன் இறுதி போட்டியில் மோதுவது யார்?

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் ஞாயிறு அன்று இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நாளை குவாலிபயர் 2 போட்டி நடைபெற உள்ளது.
 
இதில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே நடந்த குவாலிபயர் ஒன்று போட்டியில் லைக்கா கோவை அணி வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்ற நிலையில்  திருப்பூர் அணியுடன்  நாளை மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் கோவை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆகஸ்ட் நான்காம் தேதி இறுதி போட்டி சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரின் இந்த ஆண்டுக்கான சாம்பியன் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva