புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (17:48 IST)

இந்த டிராவை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை – ஆஸி கேப்டன் டிம் பெய்ன்!

சிட்னி டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்துள்ளது. இது குறித்து ஆஸி கேப்டன் டிம் பெய்ன் பேசியுள்ளார்.

இன்று நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் 403 ரன்களை துரத்திய இந்திய அணி 334 ரன்கள் சேர்த்து போட்டியை டிரா செய்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய பேட்ஸ்மேன்களான புஜாரா, பண்ட், விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ட்ரா செய்தது. ரிஷப் பண்ட் மட்டும் அவுட் ஆகவில்லை என்றால் வெற்றி பெற்றிருக்கக் கூட வாய்ப்பு இருந்தது.

போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ‘ இன்று காலை நாங்கள் பந்துவீசிய போது வெற்றி எங்களுடையது என உறுதியாக நம்பினோம் எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். அதனால் இந்த டிராவை எங்களால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்ச்களை பிடிக்கவில்லை. அதிலும் நான். என்னுடைய தவறுதான். அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு அடுத்த போட்டிக்கு செல்ல வேண்டியதுதான்’ எனக் கூறியுள்ளார்.