வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (17:25 IST)

வெப் சீரிஸில் நடிக்கவே மாட்டேன் – நடிகர் ஜெயம் ரவி ஓபன் டாக்!

நடிகர் ஜெயம் ரவி தான் வெப் சீரிஸில் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கை அனுமதி இல்லாததால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ஓடிடி தளங்களுக்காக படங்கள் நடித்தாலும், நேரடியாக வெப் சீரிஸீல் நடிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.