வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (13:15 IST)

தமிழகத்தில் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி: தயார் நிலையில் சுகாதாரத்துறை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது மாதங்களாக கொரோனா வைரஸ் பொது மக்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு முடிவு கட்டும் வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்தது. 
 
இதனை அடுத்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அண்மையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 
 
கொரோனா தடுப்பூசிக்கான முன்னேற்பாடுகளில்  தீவிரம் காட்டி வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று சுமார் 45 சுகாதார மாவட்டங்களுக்கு 28 லட்சம் ஊசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்திற்கு 6.01 லட்சம் ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மண்டலத்திற்கு 3.79 லட்சம் ஊசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.