வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (11:38 IST)

சென்னையில் ஐபிஎல் முதல் போட்டி – டிக்கெட் விற்பனை ஆரம்பம் ?

12 ஆவது ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு எப்ரல் முதல் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.ஆனால் பிசிசிஐ இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸுக்கும் இடையில் நடக்க இருக்கிறது. 23 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விறபனை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை 16 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்கும். டிக்கெட்டுகள் மொத்தம் விற்பனை ஆகும் வரை இது தொடரும்.சென்னை அணியின் உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்பனையை இன்புக்மை ஷோ.காம் நிறுவனம் கையாள்கிறது. சி, டி மற்றும் இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500   விலையில் விற்பனையாகிறது.