உலகக்கோப்பை ஸ்பெஷல் - இந்திய கிரிக்கெட் அணிக்குக் கலக்கலான புது ஜெர்ஸி !

Last Modified சனி, 2 மார்ச் 2019 (12:41 IST)
உலகக்கோப்பைப் போட்ட்டிகளை முன்னிட்டு இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸிகள் சீருடையாக வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் 2 மாதக் காலத்தில் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதையடுத்து எல்லா நாட்டு வீரர்களும் தொடருக்கு தயாராகும் முனைப்பில் இருக்க அந்தந்த நாட்டு வாரியங்கள் தங்கள் அணியை சிறப்பாக வடிவமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியக் கிர்க்கெட் வாரியமான பிசிசிஐ உலகக் கோப்பைக்கு இந்திய அணியை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக அணிக்கான புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. இந்திய அணியின் பிரத்யேக நிறமான நீலத்திலேயே அடர் நீலம் மற்றும் மெளிர் நீலம் என இரு வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தாண்டு உலகக்கோப்பைக்கான சீருடை.

சமீபத்தில் இந்த சீருடைகளுடன் இந்திய வீர்ர்களை போட்டோ ஷூட் செய்துள்ளது பிசிசிஐ. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. அதனையடுத்து இந்தத் தொடரிலேயே இந்த புதிய சீருடையை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :