எனது கடைசி போட்டி இங்குதான் – ’தல’ தோனி
இந்திய அணிக்கு 3 விதமான உலக்கோப்பைகளும் வென்று கொடுத்தவர் முன்னாள் கேப்டன் தோனி.
இவர் கடந்த ஐபிஎல் தொடரின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது ஐபிஎல்-14 வது சீசனில் சென்னை அணிக்கு கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், தனது கடைசிக் கிரிக்கெட் போட்டி குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஃபர்வெல் போட்டியாகச் சென்னை கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் இருக்க வேண்டும். இதைவிட சிறந்த ஃபேர்வெல் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.