திங்கள், 4 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (12:32 IST)

இதனால்தான் நான் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றவில்லை… வாசிம் அக்ரம் கருத்து!

உலகின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஒருவர்.

அவர் இதுவரை விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு உரியவர். கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல லீக் அணிகளுக்கு அவர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டதில்லை. இதுகுறித்து அவரே இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்’. ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் பட்சத்தில் 200- 250 நாட்களை செலவிடவேண்டும். வெளிநாடுகளுக்கு குடும்பத்தை பிரிந்து செல்ல நேரிடும். என்னால் அவ்வளவு நாட்கள் செலவிடமுடியாது. ஆனால் லீக் போட்டிகள் என்றால் நீங்கள் உள்நாட்டிலேயே இருக்கலாம். வீரர்கள் உங்களிடம் போன் மூலமாக கூட ஆலோசனைகளைக் கேட்டுகொள்வார்கள்’ எனக் கூறியுள்ளார்.