1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (20:00 IST)

தோனி பேட்டிங் மந்தமாகிவிட்டது.. பிரையன் லாரா விமர்சனம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சி எஸ் கே கேப்டனுமான தோனியின் பேட்டிங் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

சென்னை அணி இந்த சீசனில் வரிசையாக போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இந்தவெற்றிகளால் தோனியின் மோசமான பேட்டிங் பார்ம் பற்றி பெரிதாய் விமர்சனங்கள் எழவில்லை. இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி இதுவரை 83 ரன்கள் மட்டுமே அவர் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து கிட்டத்தட்ட 20 ரன்கள் குறைவாக எடுக்க காரணமாக இருந்தார். இதனால் நேற்றைய தோல்விக்கு தோனிதான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் முன்னாள் மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா ‘தோனி பார்முக்கு வரவேண்டும் என முயல்கிறார். ஆனால் அவரின் பேட்டிங் மந்தமாக உள்ளது. பந்து பேட்டில் பட்டாலே திருப்தி அடைகிறார். அவருக்கு முன்னதாக ஜடேஜாவை இறக்கவேண்டும். ஏனென்றால் அவர் இப்போது பார்மில் உள்ளார். டெத் ஓவர்கள் இப்போது அவர் கையில்தான் உள்ளது’ எனக் கூறியுள்ளது.