இந்தியா - வங்கதேச அணிகள் இடையே முதல் டெஸ்ட் : இந்தியா அணி இன்னிங்ஸ் வெற்றி!

india won
sinojkiyan| Last Modified சனி, 16 நவம்பர் 2019 (15:51 IST)
இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய  முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணித் தலைவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் இந்தியா மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் 493 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
 
இதையடுத்து இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸைப் போலவே இந்திய பவுலர்களிடம் சரண் அடைந்தது. அந்த அணியின் முஷ்கிபூர் ரஹ்மானைத் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இப்போது பங்களாதேஷ் 213 ரன்களை சேர்த்து 9 விக்கெட்களை இழந்துள்ளது. 
 
இன்னும் ஒரு விக்கெட்டை இந்தியா கைப்பற்றினால் இந்த போட்டியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மூன்றாவது நாளிலேயே முடிக்கலாம் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார பெற்றுள்ளது.
 
மேலும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 
 
இந்திய அணி வெற்றிபெற்றதை அடுத்து, ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :