செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (11:03 IST)

ஓய்வு பெற்ற மலிங்கா - பும்ரா நெகிழ்ச்சி

டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அறிவித்தார். 

 
கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அனைத்து வகைப் கிரிக்கெட் போட்டியிலும் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் லஷித் மலிங்கா பற்றி பும்ரா தெரிவித்துள்ளதாவது, அனைவருக்கும் உதாரணமாகத் திகழும் உங்கள் கிரிகெட்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். மலி உங்கள் அனைத்து எதிர்கால திட்டங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடியது இனிமை மகிழ்ச்சி. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி மலிங்கா என்று கூறியுள்ளார்.