1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (22:38 IST)

கிரிக்கெட் ஜாம்பாவான்....’’தல’’ தோனியின் வெற்றிப் பயணம் ஒரு பார்வை....

கபில்தேவிற்குப் பிறகு முன்னாள் கேப்டன் கங்குலியை சிறந்த கேப்டன் என எல்லோரு அழைத்து வந்தனர். அதன்பிறகு மூன்று வகையான ( ஒருநாள், டி-20, ஐசிசி சாம்பியன் ) உலகக் கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனியை சிறந்த கேப்டன் என்று அழைத்து வந்தனர்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஊழல் சிக்கிய கடந்த 1996 அம் ஆண்டுக்குப் பிறகு, கங்குலி 1996 ஆம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்றார்.
 
அவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பதிவு செய்து சாதித்தது.
 
அதன்பிறகு தோனி இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் இந்தியா டி-20, 50 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
 
இதுகுறித்து முன்னாள் காம்பீர் கூறும்போது, சவுரங் கங்குலியை விட எம்.எஸ்.தோனியே சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக்
கொண்டவருமானதோனி,கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும்பெற்றுத் தந்தை ஒரே கேப்டன் ஆவார். இவர் தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல்  கேப்டன்' என அழைப்பட்டார்.
சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடங்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற செய்திகளும் ஊடகங்களில் கசிந்து வந்த நிலையில் தோனி மீண்டு விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் நம்பினர்.
 
இந்த சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியத தினம். ஏனெனில் இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 
தோனியின் முடிவு  அதிர்ச்சியாக அளிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தோனியின் சாதனைகளைப் பார்ப்போம்.
 
அறிமுகமான வருடம் : 2004, ஆம் ஆண்டு பங்களதேஷ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசி ஒருநாள் போட்டி 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது.
 
டெஸ்ட் போட்டியில் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது.
 
இதுவரை 158 ஒருநாள் போட்டிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். 251 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
 
முதல் டி20  2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அண்கிக்கு எதிராக அறிமுகமானார்,  கடைசி டி-20 கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. 
 
தோனி மொத்தம் 538 மேட்ச்களில் விளையாடியுள்ளார், மொத்தம் அவர் 17,266 ரன்கள் அடித்துள்ளார். இதில் 16 சதங்களும்,  108 அரைசதங்களும், 359 சிக்ஸர்களும் என தனிப்பட்ட சாதனைகளை செய்துள்ளார்.