புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (11:31 IST)

பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் டிராமா ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்ஷி லொஸ்லியா என மூன்று பேரின் முக்கோண காதல் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது மற்றொரு காதல் ஆரம்பித்துள்ளது . 

 
அபிராமி, முகன் ராவ்வின் காதல் டிராமா ஆரமித்துள்ளது. அபிராமி ஆரம்ப காலத்தில் கவினை காதலிப்பதாக கூறி வந்தார். பின்னர் அவர்களுக்கு நடுவில் சாக்ஷி நுழைந்து அந்த காதலை கலைத்து விட்டு தனது காதல் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும்  வெறுப்பேற்றி வந்தார். கர்மா இஸ் பேக் என்பதற்கு உகந்தவாறு கவின் சாக்ஷிக்கு நடுவில் லொஸ்லியா புகுந்து ஆட்டத்தை கலைத்தார். பின்னர் வார இறுதியில் ஒருவழியாக இந்த முக்கோண காதல் முடிவுக்கு வந்தது. 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் அபிராமி மற்றும் முகன் ராவ்வின் காதல் டிராமா ஆரம்பித்துள்ளது. இவர்களுக்கு இடையில் சாக்ஷி நுழைந்துள்ளார். எனவே இந்த வாரம் முழுக்க முகன் ராவ் , அபிராமி, சாக்ஷி என இந்த மூவரின் முக்கோண காதல் தான் அரகேற்றப்படும்.