1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:09 IST)

புரோ கபடி.. அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்!

thalaivas
கடந்த சில வாரங்களாக புரோ கபடி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதிக்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பெங்களூர் மற்றும் தமிழ் தலைவாஸ் பணிகள் தோல்வியடைந்தன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் ஜெய்ப்பூர் அணி ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தியது என்பதும் அந்த அணி 40க்கு 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ் தல்வாஸ் மற்றும் புனே அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் மாறி மாறி அதிக புள்ளிகளை எடுத்து வந்ததால் போட்டி சவாலாக இருந்தது
 
இறுதி கட்டத்தை நெருங்கிய போது 39- 37 என்ற கணக்கில் புனே அணி திரில் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran