புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:33 IST)

’12 லட்சம் கோடி’ ஊழலுக்கா ? ப. சிதம்பரம் டுவீட்டுக்கு ஹெச். ராஜா கிண்டல்...

நாட்டை மீட்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடிய நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடு பெறுவதில், அனுமதி அளிப்பதில் முறைகேடு செய்ததாகவும், ஊழல் செய்ததாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அவரது  குடும்பத்தினர் அடிக்கடி சிதம்பரத்தை சிறையில் சந்தித்து வருகின்றனர்.
 
சிதம்பரம், தனது சார்பாக அவரது குடும்பத்தினரை டுவிட்டரில் பதிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, இன்று மன்மோகன் சிங்கிற்கு  பிறந்தநாள் ஆகையால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து  ஒரு டுவீட் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
பொருளாதாரச் சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை கேட்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் ; தற்போது நாட்டில் இருக்கும் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை வெளியே கொண்டுவர அவரால்  மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு, பாஜக தேசிய செயலர் ராஜா ஒரு டுவீட்டை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.
அதில்,  ’செய்த ஊழல் போதாது போலிருக்கிறது’... ’ஏன் மக்களின் வபரிப்பணம் இன்னமும் 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்யவா ’எனப் பதிவிட்டுள்ளார்.