வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (14:14 IST)

பெங்களூருவை தாக்க சதியா?? பயங்கரவாதிகளின் திட்டம் என்ன??

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளை கைது செய்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்புடைய பயங்கரவாதிகளில் சிலர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகின. உடனடியாக தேசிய புலனாய்வு அதிகாரிகள், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து பெங்களூர் ராம்நகரில் பதுங்கி இருந்த ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலை அடுத்து தொட்டப்பள்ளாபுராவில் பதுங்கி இருந்த ரஹிபுல் ரகுமான் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர்.

குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிகுண்டுகளை தயாரித்து கொடுக்கும் பணியில் ரஹிபுல் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு உதவியாக இருந்த நஷீர்ஷேக் என்பவரை வைத்து பெங்களூரு நகரில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நஷீர்ஷேக்கை புலனாய்வு அதிகாரிகள் தேடி வந்த நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியில் அவரை கைது செய்தனர்.

பின்னர் நஷீர் ஷேக் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில் சில ரகசிய தகவல்கள் கிடைத்தாக கூறப்படுகிறது. இதன் பிறகு நஷீரின் வீட்டை சோதனை நடத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.