1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 6 ஜூன் 2016 (20:11 IST)

சுஷில் குமாருக்கு ஆப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் மல்யுத்த சங்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியது.


 
 
வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த பிரிவில் இந்தியா சார்பில் 74 கிலோ எடைப் பிரிவில் நர்சிங் யாதவ் தகுதி பெற்றார். இதனை எதிர்த்து சுஷில் குமார் தன்னை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என முறையிட்டார்.
 
ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற சுஷில் குமார், தகுதிச் சுற்றில் பங்கேற்காததால் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது தனக்கும் நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவரை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்ய வேண்டும், என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
 
சுஷில் குமாரின் இந்த கோரிக்கையை இந்திய மல்யுத்த சம்மேளனம் நிராகரித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுஷில் குமார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
 
இந்த தீர்ப்பில், சுஷில் குமாரின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் தலையிட முடியாது, என்று கூறி தள்ளுபடி செய்தது.