திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (07:28 IST)

சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்ட தோனி: வைரல் புகைப்படம்..!

இந்திய கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர் என்று போற்றப்படும் சுனில் கவாஸ்கருக்கு தல தோனி ஆட்டோகிராப் போட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தோனி உட்பட சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் தோனியிடம் ஆட்டோகிராப் கேட்க உடனே தோனி அவருடைய சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது மட்டுமின்றி தோனி பல கிரிக்கெட் வீரர்களின் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் தோனிக்கு வழிகாட்டியாக இருந்த சுனில் கவாஸ்கர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva