திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (12:16 IST)

அஷ்வின் வடிவில் நான் அவரை காண்கிறேன்: யாரை கூறுகிறார் ஸ்டீவ் வாக்?

கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான் பிராட்மேனைப் போல பவுலிங் ஜாம்பவானாக மாறிக்கொண்டிருக்கிறார் அஸ்வின் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.


 
 
அஸ்வின் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவ் வாக், பிராட்மேன் போல இலக்கை வேகமாக அடையக்கூடிய பவுலர்களில் முதன்மையாக அஸ்வின் உள்ளார். அஸ்வினை பார்க்கையில்  பிராட்மேன் பவுலிங் செய்வது போல உள்ளது என கூறியுள்ளார்.
 
பிராட்மேன் பேட்டிங்கில் செய்த சாதனையைப் போல், அஸ்வின் பவுலிங்கில் செய்து வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.